தவத்திரு தனி நாயகம் அடிகளாரின் தணியாத தாகம்

தவத்திரு தனி நாயகம் அடிகளார், தமிழ்மீது தாம் கொண்ட தீராத காதலால் ஒரு உலகு தழுவிய தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை 1964-ஆம் ஆண்டு தொடங்கினார்.

“It was Father Xavier Thani Nayagam who reminded Tamils of their great cultural heritage and the noble ethical ideals permeating it. So to speak, he built in them their cultural identity and political personality. And more, this deeply read scholar strode the continents carrying aloft the flag of the Tamil language and culture and drawing many savants into its service. And so came into being, fifty two years ago, the International Association of Tamil Research, linking the world's foremost Tamil scholars.”

தவத்திரு தனி நாயகம் அடிகளார் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் கீழ்க்காணும் நோக்கங்களைக் கொண்டிருந்தது; உலகம் முழுவதும் தமிழ் ஆய்வை மேற்கொண்டு, சிதறிக் கிடக்கின்ற சிறு நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துதல், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பொதுவானவற்றைப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், பிறநாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக அமைத்தல், அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களைத் தமிழாராய்ச்சியில் ஈடுபடச் செய்தல், தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழிலக்கியம், தமிழ்ச் சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி பல்கலைக்கழகத் தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் செயல்பட இம்மன்றம் தொடங்கப்பட்டது.

உலகிலுள்ள அறிஞர் பலரை ஒன்று சேர்த்து, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவுவதும் வகையில் இரண்டாண்டுகட்கு ஒருமுறை "உலகத் தமிழ் மாநாடு' நடத்த இம்மன்றம் முடிவு செய்து, மாநாடு நடத்தவிரும்பும் நாடுகள் இம்மன்றத்தின் ஒத்துழைப்புடன் மாநாடுகளைச் சிறப்புற நடத்த வழி செய்தது. இம்மன்றத்தின் முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்தப்பெற்றது. அதை அடுத்து, கோலாலம்பூரில் மூன்று மாநாடுகளும், சென்னை, பாரீசு, ஜாஃப்னா, மதுரை மரூசியசு, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் என ஒன்பது மாநாடுகள் நடத்தப்பட்டன.

ஆனால் 52 ஆண்டுகளில் 26 மாநாடுகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் அதறிகு மாறாக 9 மாநாடுள் மட்டுமே நடந்துள்ளன. மேலும் தவத்திரு தனி நாயகம் அடிகளார் விரும்பிய தமிழ் ஆராயச்சிகள் ஏதுமின்றி, இன்று உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தடுமாறி நிற்கின்றது. இதனை முனைர் சு.இராசாராம்,பேராசிரியர் (ஓய்வு), அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு, “இன்று தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம், மீண்டும் புத்துயிர் பெறுவது தமிழியல் துறை சார்ந்த நேர்மையும் ஆளுமையும் மிக்க இளம் ஆய்வறிஞர்களின் தோள்மீதுதான் உள்ளது என்றும். அருட்தந்தை தனிநாயக அடிகளார்போல் இன்னொரு தமிழறிஞர் தலைமையேற்று இந்த மாமன்றத்தைத் தலைநிமிரச் செய்ய முன்வருவாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

Prof.Noboru Karashima has also said that the time has come for the IATR to assume a new avatar. It has completed its historical role by making people realize the importance of Tamil studies, just as the Dravidian Movement did in respect of its original objectives. A new IATR must now be created to function as a real academic body. IATR must be resurrected in a new way. Its renaissance rests on the shoulders of young and sincere scholars of Tamil studies.

மேலே சுட்டிக் காட்டியுள்ளதைப் போன்ற பலருடைய ஏக்கங்களைத் தீர்க்கவே இன்று உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் இன்று இந்தியாவில் World Tamil Research Association என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு, புத்துயிர் பெற்று; பல பதிய செயல் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. உலகு தழுவி வாழும் தமிழ் அறிஞர்களை ஆர்வத்தோடு தமிழ் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தி, தவத்திரு தனி நாயகம் அடிகளரின் தணியாத தாகத்தைத் தீர்க்க இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது, உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், உலக அளவில் பெருகி, தவத்திரு தனி நாயகம் அடிகளரின் கனவுகளை தீவிரமாக செயல்படத்த வேண்டுமெனில், உலகில் பெருமளவில் தனிமனித உறுப்பினர்களும் நிறுவன உறுப்பினர்களும் ஆர்வத்துடன் மன்றத்தில் சேரவேண்டும். மேலும் உலகின் பலவேறு நாடுகளில் மன்றத்தின் தேசியக் கிளைகளைத் தோற்றுவிக்க வேண்டும். இந்த நோக்கங்களுடன்தான் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மையக்கு.ழு செயல்படத் தொடங்கியுள்ளது. ஊர்கூடித் தேர் இழுத்தால்தான் தேர் நகரும். தவத்திரு தனி நாயகம் அடிகளரின் முயற்சியால் தமிழக அரசால் தொடங்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தோடு தோள் கொடுத்து செயல்பட முன்வந்துள்ளன.

உலகு தழுவி வாழும் தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஆர்வத்தோடு தமிழ் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு தவத்திரு தனி நாயகம் அடிகளரின் தணியாத தாகத்தைத் தீர்க்கப் பாடுபடவேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.

அன்புடன்,
உ. த. ஆ. மன்றத்தின் மையக்குழு.