அறிவிப்புகள்

மாநாடுகள்

  1. முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
  2. இரண்டாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சி.என்.அண்ணாத்துரை தலைமையில் தமிழக அரசின் உதவியுடன் சென்னையில் நடத்தப்பட்டது.
  3. மூன்றாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1970 ஆம் ஆண்டு சனவரி 15-18ஆம் நாட்களில் பாரிசு நகரல் பாரிசு பல்கலைக்கழகத்தில் பேரா. ஜீன் பிலியோசா நடத்தினார்.
  4. நான்காவது மாநாடு நான்கு ஆண்டுகள் கழித்து 1974 ஆம் ஆண்டு சனவரி 3 -9 ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில் திரு வித்யானந்தன் நடத்தினார்.
  5. ஐந்தாவது மாநாடு ஏழு ஆண்டுகள் கழித்து 1981 ஆம் ஆண்டு சனவரி 4-10ஆம் நாட்களில் மதுரையில் தமிழக அரசின் .உதவியுடன் நடத்தப்பட்டது.
  6. ஆறாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 15-19 ஆம் நாட்களில் கோலாலம்பூரில் நடந்தது.
  7. ஏழாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 1-8 ஆம் நாட்களில் ஆப்பிரிக்காவில் மொரீசியசில் நடந்தது.
  8. எட்டாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டு சனவரி 1-5 ஆம் நாட்களில் தஞ்சாவூரில் நடந்தது.
  9. ஒன்பதாவது மாநாடு இருபது ஆண்டுகள் கழித்து 2015 ஆம் ஆண்டுசனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது.
  10. பத்தாவது மாநாடு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 முதல் 7 வரை அமெரிக்காவில் சிக்காகோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.
  11. பதினொன்றாவது மாநாடு 2023 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 முதல் 9 வரை சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நேரில் வழங்கினர்.
  12. பதினொன்றாவது மாநாடு அறிக்கை : 11th International Conference
    பதினொன்றாவது மாநாடு காணொளி : #11ஆவதுஉலகத்தமிழாராய்ச்சிமாநாடு சென்னை DAY-1 SHORT VIDEO
    பதினொன்றாவது மாநாடு படங்கள் : பதினொன்றாவது மாநாடு படங்கள்