செயல்திட்டங்கள்
- தனி மனித மற்றும் நிறுவன உறுப்பினர்களைச் சேர்த்தல்
- சங்க இலக்கியங்கள் பற்றிய பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல்
- சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழ் ஆய்வு நிறுவனங்களுடனும் தமிழ் அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு மேற்கொள்ளுதல்.
- தேசியக்கிளைகள் அமைத்து, மேற்கண்ட தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
- மக்களிடையே தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய சிறப்புகள் ஆகியவற்றை பரப்புவதற்காக செய்திமடல்கள், இதழ்கள், தனி வரைவு நூல்கள் போன்ற வெளியீடுகளை தேசியக்கிளைகள் வெளியிடுதல்.
- மன்றத்தின் தனித்தன்மையை இழக்காமல், பிற நிறுவனங்களோடு இணைந்து மன்றத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லுதல்.
- மன்றத்தின் நோக்கங்களை மேம்படுத்தும் வகையில் தமிழியல் ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு விருதுகள், உதவித்தொகை, மாநாடுகளில் கலந்துகொள்ள பயணப்படி போன்றவற்றை வழங்குதல்.
- சங்க இலக்கியங்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்தல்
- மொழிபெயர்த்த சங்க இலக்கியங்களை பதிப்பித்து வெளியிடல்
- உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்துதல்
- உலகத் தமிழர்களின் தமிழ்க்கல்வித் தேவையை நிறைவேற்ற உலகத்தமிழ் அமைப்புகளோடும் உலகளவிய தமிழ்ச்சங்கங்களோடும் இணைந்து செயல்படல்
- மன்ற வெளியீடாக 'உலகத்தமிழ் பண்பாட்டு இதழ் - International Journal of Tamil Culture' ஒன்றை வெளியிடல்