செயல்திட்டங்கள்

  1. தனி மனித மற்றும் நிறுவன உறுப்பினர்களைச் சேர்த்தல்
  2. சங்க இலக்கியங்கள் பற்றிய பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல்
  3. சங்க இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழ் ஆய்வு நிறுவனங்களுடனும் தமிழ் அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டு மேற்கொள்ளுதல்.
  4. தேசியக்கிளைகள் அமைத்து, மேற்கண்ட தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
  5. மக்களிடையே தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய சிறப்புகள் ஆகியவற்றை பரப்புவதற்காக செய்திமடல்கள், இதழ்கள், தனி வரைவு நூல்கள் போன்ற வெளியீடுகளை தேசியக்கிளைகள் வெளியிடுதல்.
  6. மன்றத்தின் தனித்தன்மையை இழக்காமல், பிற நிறுவனங்களோடு இணைந்து மன்றத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லுதல்.
  7. மன்றத்தின் நோக்கங்களை மேம்படுத்தும் வகையில் தமிழியல் ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு விருதுகள், உதவித்தொகை, மாநாடுகளில் கலந்துகொள்ள பயணப்படி போன்றவற்றை வழங்குதல்.
  8. சங்க இலக்கியங்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்தல்
  9. மொழிபெயர்த்த சங்க இலக்கியங்களை பதிப்பித்து வெளியிடல்
  10. உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்துதல்
  11. உலகத் தமிழர்களின் தமிழ்க்கல்வித் தேவையை நிறைவேற்ற உலகத்தமிழ் அமைப்புகளோடும் உலகளவிய தமிழ்ச்சங்கங்களோடும் இணைந்து செயல்படல்
  12. மன்ற வெளியீடாக 'உலகத்தமிழ் பண்பாட்டு இதழ் - International Journal of Tamil Culture' ஒன்றை வெளியிடல்